யாருடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்தால் வெற்றி பெறலாம்:
படித்து முடித்தவுடன் இன்றைய இளைஞர்கள் சும்மா இருக்க விரும்புவதில்லை. ஏதாவது ஒரு தொழிலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். உடன் படித்த நண்பர்கள் அல்லது உற்றார், உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, சிறப்பாகச் செயல்பட்டு, அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடைந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பினை பெறுகிறார்கள். ஒருவர் தனி நபராகச் செயல்படாமல் யாரையாவது துணைக்கு சேர்த்துக் கொண்டு கூட்டாக சேர்ந்து தொழில் செய்வதே கூட்டுத் தொழிலாகும். எல்லோருக்குமே அரசாங்க பணி கிடைக்குமா என்றால், அது இயலாத காரியம்தான். மற்றவர்களிடம் கைகட்டு சேவகம் செய்ய எல்லோருமே விரும்புவார்களா? என்றால், அதுவும் இயலாதது தான். சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் நம்பிக்கைக்குரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் செய்கிறார்கள். இப்படி கூட்டுத் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் ஜோதிட ரீதியாக யாருக்...