நவக்கிரகங்களும் உங்களின் தொழில் உத்தியோக அமைப்பும்:

ஒருவரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது ஜென்மலக்னத்திற்கு 10ம் வீடும், 10 ம் அதிபதியும், 10ம் வீட்டில் அமையப் பெற்ற கிரகமும், 10ம் அதிபதி அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கின்றாரோ அக்கிரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கூறிய கிரகங்களில் எந்தக் கிரகம் அதிக பலம் பெறுகிறதோ அக்கிரகத்திற்குரிய துறையில் ஜாதகர் பிரகாசிக்க கூடியபோகம் உண்டாகும். சூரியன் ஜென்ம லக்னத்திற்கு 10 வீட்டில் வலுபெற்ற கிரகமாக சூரியனிருந்தால் வாழ்வில் பல சாதனை படைக்கும் அமைப்பு, அதிகம் சம்பாதிக்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் 10ல் பலமாக அ¬ந்திருந்தால் அரசு, அரசாங்க துறைகளில் கௌரவபதவி, வங்கிபணி, மருத்துவத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு நல்ல நிர்வாகத்திறனும் உண்டாகும். சூரியன் வீடான சிம்மத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சிம்மத்தில் சனி, ராகு, போன்ற பாவ கிரகங்கள்அமையப் பெற்றால், செய்யும் தொழிலில் போட்டி, பொறாமை மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களால் பிரச்ச...