தன யோகம் பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 11ம் வீடு லாபஸ்தானம் ஆகம். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 4ம் வீடு அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10ம் வீடு தொழில் ஸ்தானமாகும். பொதுவாக தன ஸ்தானாதிபதி 1, 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பாக்கிய ஸ்தானமான 9ம் அதிபதி 1, 2, 4, 5 10, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் 10ம் அதிபதி 1, 2, 4, 5, 11க்கு அதிபதிகளுடன், சேர்க்கை பெற்றாலும் 11ம் அதிபதி 1, 2, 4 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் லக்னாதிபதி 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக தனாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுகிறதோ, எந்த பாவாதிபதியுடன் சேர்க்கை பெறுகிறதோ, அந்த பாவம், அக்கிரகம் யாரை குறிக்கிறதோ அவர்கள் மூலம் தாராளமான தன வரவுகள் உண்டாகும். தந்தை ஜென்ம லக்னத்திற்கு 9ம் வீடு தந்தை ஸ்தானம். தந்தை காரகன் சூரியன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 2, 9க்கு அதிபதி பலம் பெற்று இருந்தாலும் 2, 9க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று உடன் சூரியனும் பலம் பெற்றிருந்தாலும் 2, 9ல் பாவ கிரகங்...