Posts

மிரட்டும் மூல நோய்.. விரட்ட வழிகள்;

Image
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும். முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துள...

108 சித்தர்கள் மற்றும் அவர்கள் ஜீவ சமாதி இருக்கும் இடம் ;

Image
1. திருமூலர் - சிதம்பரம்.  2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.  3. கருவூர்சித்தர் - கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.  4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் - திருவரங்கம். 9. அகத்தியர் - திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் - பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை 24. மார்க்கண்டேயர் - கருவ...

பரியங்க யோகம்

Image
பரியங்க யோகம் பாடல் எண் :  1 பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய காசக் குழலி கலவி யொடுங்கலந் தூசித் துளையுறத் தூங்காது போகமே.  பொழிப்புரை  : யோகி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடினானாயினும், அவனது மனம் பிரமந்திரத்திலே நிற்கும் ஆதலின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும்.) குறிப்புரை  : `புலர்த்திய, சாத்திய` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `காசக்குழலி` என்னும் ஒரு பெயர் கொண்டன. காசம் - மயிர்ச்சாந்து. `கலந்தும்` என உம்மையை மாற்றியுரைக்க. ஊசித் துளை, பிரம ரந்திரம். தூங்குதல், மேலிடல். இதனால், பரியங்க யோகம் ஆமாறு கூறப்பட்டது. பாடல் எண் :  2 போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந் தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.  பொழிப்புரை  : போகத்தில் மனம் சென்றவழிப் பிராணன் சுழு முனை வழியில் செல்லமாட்டாது. காமத்தை விளைக்கின்ற வெண்பாலும் செம்பாலில் வீழ்ந்தொழியும், ஆகவே, துணைவியும், துணைவனும் ஆகிய இருவரும் தங்கள் செ...

தட்டுப்பாடற்ற தன வரவு யாருக்கு?

Image
தன யோகம் பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 11ம் வீடு லாபஸ்தானம் ஆகம். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 4ம் வீடு அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10ம் வீடு தொழில் ஸ்தானமாகும்.  பொதுவாக தன ஸ்தானாதிபதி 1, 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பாக்கிய ஸ்தானமான 9ம் அதிபதி 1, 2, 4, 5 10, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் 10ம் அதிபதி 1, 2, 4, 5, 11க்கு அதிபதிகளுடன், சேர்க்கை பெற்றாலும் 11ம் அதிபதி 1, 2, 4 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் லக்னாதிபதி 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக தனாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுகிறதோ, எந்த பாவாதிபதியுடன் சேர்க்கை பெறுகிறதோ, அந்த பாவம், அக்கிரகம் யாரை குறிக்கிறதோ அவர்கள் மூலம் தாராளமான தன வரவுகள் உண்டாகும். தந்தை ஜென்ம லக்னத்திற்கு 9ம் வீடு தந்தை ஸ்தானம்.  தந்தை காரகன் சூரியன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 2, 9க்கு அதிபதி பலம் பெற்று இருந்தாலும் 2, 9க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று உடன் சூரியனும் பலம் பெற்றிருந்தாலும் 2, 9ல் பாவ கிரகங்...

ராகு கேது மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும்போது;

Image
               நவ கிரகங்களில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு கேது மனித வாழ்வில் பல்வேறு விநோதங்களை உண்டாக்குகின்றது. குறிப்பாக இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த வீடுகள் இல்லை என்றாலும், இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாகக் கொண்டு பலாபலன்களை வழங்குவார்கள். அது மட்டுமின்றி ராகு, கேது இருக்கின்ற வீட்டதிபதிகள் பலமாக இருந்தால் சாதகம் மிகுந்த பலன்கள் உண்டாகும். அது மட்டுமின்றி ராகு கேது மற்ற கிரகங்களுடன் இணைந்திருக்கும்போது கூட பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார்கள். இதனைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம். ராகு சூரியன் சேர்க்கை பெற்றால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவினர்களிடம் பகை, எந்தபாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவத்தை பாதிக்கும் அமைப்பு உண்டாகும். அதுவும் 8ல் அமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும். ராகு சந்திரன் சேர்க்கை பெற்றால் மனக் குழப்பம், முன்கோபம், முரண்பட்ட பழக்க வழக்கங்கள், தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகும். ராகு செவ்வாய் சேர்க்கை பெற்று ஒரு ஆண் ஜாதகத்தில் முரட்டுத் தனம், பிடிவ...

சொந்தவீடு யோகம்:

Image
சொந்தவீடு யோகம் என்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சியமாகும். எலி வலை ஆனாலும் தனிவலை வேண்டும். என விரும்புபவர்களே அதிகம். எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு சொந்த வீடு கட்டியோ, வாங்கியோ விட வேண்டும் என்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லோருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடை கூற முடியாது. கற்பனைகள் அனைத்தும் கனவாகவே முடிந்து விடுவதும் உண்டு. சிலர் சொந்த வீடு கட்ட நினைத்து வங்கியில் கடன் வாங்கி அலைச்சல் பட்டு அதை ஒழுங்காக கட்ட முடியாமல் போதுமாடாசாமி என நினைப்பவர்களும் உண்டு. சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும்  யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த  வீட்டிற்கு  அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள். இப்படி சொந்த வீட்டுமனை அமைய  ஜாதக ரீதியாக 4ம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத...