திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்ரெண்டாவது இடத்தை பெறுவது திருவோண நட்சத்திரமாகும். திரு என்ற அடைமொழியுடன் விளங்கும். இதன் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இது மகர ராசிக்குரிய நட்சத்திரமாகும். உடலில் தொடை, தொடை எலும்பு சுரப்பிகள், முட்டிகள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் ஜீ, ஜே, ஜோ, கா ஆகியவை தொடர் எழுத்துக்கள் க,கா,கி,கீ ஆகியவை. குண அமைப்பு; திருவோண நட்சத்திராதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வல்லல் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் இதமாக பேசி பழகுவார்கள். ஒணத்தில் பிறந்தவன் கோணத்த...
Comments
Post a Comment