12 பாவமும் நோய்களும்:
12 பாவமும் நோய்களும்
நம்முடைய உடல் உறுப்புகளில் எல்லாமே இன்றியமையாததுதான். எதாவது ஒன்றில் குறையிருந்தாலும் ஊனம், ஊனம்தான். கையில்லாதவரை பார்த்தால் ஐயோ அவருக்கு கையில்லையே என்கிறோம். கண்ணில்லாத வரைப் பார்த்தால் இரகப்படுகிறோம். மேலுறுப்புகளின் பாதிப்புகள் கண்ணுக்குத் தெரியும் என்பதால் நம்முடைய இரக்கம் அதிகமாகி அவருக்கு உதவி செய்கிறோம்.
ஆனால் கண்ணுக்குத் தெரியாத உடலுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் நமக்குத் தெரிவது ல்லை. இருதயம், நுரையீரல், கிட்னி போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ கோடி பேர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உடலுறுப்புப் பாதிப்புகளை ஜோதிட ரீதியாக பார்க்க முடியும். ராசி மண்டலத்தை 12 பாவங்களாக பிரித்துள்ளார்கள். 12 பாவங்களையும் உடலுறுப்புகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கின்ற போழுது,
ஜென்ம லக்னத்தை கொண்டு தலை,
இரண்டாம் வீட்டைக் கொண்டு வலது கண்
3ம் வீட்டைக் கொண்டு கழுத்து, வலது காது,
4ம் வீட்டைக் கொண்டு இதயம், நுரையீரல், மார்பு.
5ம் வீட்டைக் கொண்டு மேல் வயிறு, மனம்,
6ம் வீட்டைக்கொண்டு கீழ் வயிறு,
7ம் வீட்டைக் கொண்டு இடுப்பு, பின்புறம்,விந்து,
8ம் வீட்டைக் கொண்டு அந்தரங்க உறுப்புகள், சிறுநீரகம்,
9ம் வீட்டைக் கொண்டு தொடை,
10ம் வீட்டைக் கொண்டு முழங்கால்,
11ம் வீட்டைக் கொண்டு கால், இடதுகாது,
12ம் வீட்டைக் கொண்டு பாதம், இடது கண்
போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
உடலின் வாசல்கள்
ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களின் ஜெனன கால ஜாதக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களின் பரிபூரண அருள் கிடைத்தால் மட்டுமே ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சரி வர இயங்கினால் மட்டுமே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள துவாரங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் சரி வர ஜீரணித்து சிறு நீர் மலமாக சென்றால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அது போல சுவாசிக்கும் காற்றும் சரி வர இயங்கினால் தான் நல்லது. நமது உடலில் ஒன்பது வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலையும் நவக்கிரங்கள் ஆட்சி செய்கின்றன. குறிப்பாக சூரியன் & இடது கண் (வாசல்) சந்திரன் & வாய், குரு & வலது காது, ராகு & மலம், புதன் & இடதுநாசி துவாரம், சுக்கிரன் & வலது கண், கேது & சிறுநீர், சனி & இடது காது, செவ்வாய் & வலது நாசி துவாரம்,நமது தொப்பிளை மாந்தி அல்லது குளிகன் ஆளுகிறார். ஜெனன காலத்தில் எந்த கிரகம் வலு இழந்து இருக்கிறதோ அக்கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வாசல் சற்று பாதிக்கப்படுகிறது. ஜெனன கால கிரக அமைப்பில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்வது மூலம் ஏற்படக் கூடிய சோதனைகள் குறையும்.
Comments
Post a Comment