பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் கர்ப கோளாறு ஏற்படும் அமைப்பு
பெண்கள் நாட்டின் கண்கள். கருவை சுமந்து மறு உயிரை தந்து தாய் என்னும் பட்டத்தை பெற்றவர்கள்.ஒரு ஆணிண் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் அவனுடைய வாரிசையும் கருவறையில் சுமந்து சந்ததியை உற்பத்தி செய்து குலம் தழைக்க செய்கிறாள்கள்.
ஒரு பெண்ணின் கர்ப்பை, கர்ப்பை சார்ந்த பகுதிகளுக்கு நவ கிரகங்களில் சந்திரன் காரகனாகிறார்-. இதற்கு மட்டுமல்லாமல் ஒருவரது உணர்ச்சிகளுக்கும், மனோ நிலைக்கும் சந்திரன் காரகனாகிறார். ரத்த காரகன் செவ்வாய் ரத்த ஒட்டத்திற்கு காரகத்துவம் வகிக்கிறார். அதனால் செவ்வாய் சந்திரன் போன்ற கிரகங்கள் பெண்களுக்கு சாதகமான இடங்களில் அமைவது நல்லது-. மாதாமாதம் வரக்கூடிய மாதவிடாய்க்கு சந்திரன் காரகனாகவும் ஒழுங்கான ரத்த போக்குக்கு செவ்வாய் காரகனாகவும் விளங்குகிறார்கள்.
ஒரு பெண்ணிற்கு செவ்வாய், சந்திரன் சாதமாக இருந்தால் மாதாமாதம் ஏற்படக்கூடிய மாதவிடாயானது ஒழுங்காக ஏற்பட்டு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுவே சந்திரன் செவ்வாய் பாதிக்கப்பட்டால் உடை எடை கூடவோ, குறையவோ செய்யும் இதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகக் கூட தடைகள் ஏற்படலாம்.
சரியாக சந்திரன் ஒரு ராசி மண்டலத்தைச் சுற்றி வர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அது போல நல்ல ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு 27 நாட்களுக்கு ஒரு முறை மாத விலக்கு ஏற்படுகிறது. ஒரு ராசியில் சந்திரன் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிப்பது போல ஒரு பெண் மாத விலக்கும் இரண்டே கால் நாட்கள் அமையும். ஒரு சிலருக்கு 3,4 நாட்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதற்கு செவ்வாயின் நிலை காரணமாகும்.
பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் கோட்சார ரீதியாக ஜெனன கால லக்னத்தையோ சந்திரனையோ பலமாக பார்வை செய்கின்ற போது ஒரு பெண் மாத விலக்கு ஏற்படுகிறது. அது போல ஜென்ம லக்னத்திற்கு கோட்சார ரீதியாக சந்திரன் 1,2,3,4,5,7,8,9,12 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று அதனை செவ்வாய் பார்வை செய்தாலும் ஒரு பெண் மாத விலக்கு ஏற்படுகிறது.
சந்திரன், செவ்வாய் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் பலவீனமான அமையப் பெற்று, அதன் தசா புக்தி நடைபெற்றால் மாத விடாய் கோளாறு, வயிறு கோளாறு உண்டாகும். சந்திரன் மனோகாரகன் என்பதால் பெண்களுக்கு இக்காலங்களில் தேவையற்ற மனக்குழப்பங்களும், டென்ஷனும் அதிகமாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும், மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் அதிகப்படியான உடம்பு பாதிப்புகள் ஏற்படும்.
ஒரு பெண் ஜாதகத்தில் சந்திரன் அமைந்த இடம், 8ம் வீட்டின் அதிபதி இவைகள் சிறப்புடன் அமையப் பெற்றால் மட்டுமே அவளது இளம் வயது அதாவது குழந்தை பருவத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இவைகள் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்திலேயே வளர்ச்சியானது சரியாக அமையாமல் போய் விடுகின்றது. சுப கிரக பார்வையும் குருவின் உதவி அல்லது சுக்கிரனின் செவ்வாயின் உதவியும் இல்லாவிட்டால் அப்பெண் குழந்தை பருவத்தில் நோய் வாய்படும். வளர்ந்து வாலிபப் பருவம் அடைவதற்குள் இறக்க வேண்டிய சூழ்நிலைகள் கூட உருவாகி விடும் அல்லது அவளது பிற்கால வாழ்வில் தாய்மை என்னும் மிகப் பெரிய சொத்து ஏற்படுத்தக் கூடிய உறுப்புகள் சிறுத்து உபயோகமற்று பேய்விடும். பெண் குழந்தைகள் சந்திர கிரகண நேரத்தில் பிறக்கும் போது அதிக பாதிப்பை அடைகின்றது. 6ம் வீட்டில் சாதகமான கிரகம் அமைந்து நல்ல சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் சுப கிரக சேர்க்கை பெற்றாலும் அந்த கிரகங்கள் சொந்த பலம் குறைந்தாலும் அந்த பெண் குழந்தை அந்த நோய்களிலிருந்து தப்பித்து வளர்ந்து விடும்.
ஒரு பெண்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், சந்திரனுடைய அமைப்புகள் மிக மிக முக்கியமானவை. சந்திரனுக்கோ அல்லது சுக்கிரனுக்கு, 7இல் பாவ கிரகங்கள் (சமசப்தமத்தில்) அமையப் பெற்றால் அளவுக்கு மீறிய தீட்டு (அதாவது ரத்த போக்கு)உண்டாகும். அல்லது அதிகமாக வெள்ளை படும். இதனால் பெண்ணின் பலம் குறையும்.சனியால் பாதிக்கப் பட்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாயும், சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் அதிக ரத்த போக்கு, வலி ஏற்பட்டு ஒழுங்கற்ற மாதவிடாய் உண்டாகும். அது மட்டும் இன்றி செவ்வாயும் சாதகமற்று பெண் ஜாதகத்தில் அமைய பெற்-று விட்டால் எரிச்சலுடன் கூடிய அபாய கரமான சென்னிற (சிவப்பணு) இரத்த அணுக்கள் அதிகமாக வெளியேறி அப்பெண் பலம் குன்றுவாள். ஒரு பெண்ணின் பாலியல் உணர்வை குறிப்பிடும் ஸ்தானமான 7ம் வீடு, அதன் அதிபதி, சுக்கிரன், செவ்வாய் இவை ராகுவாலும் சனியாலும் குரு பார்வையின்றி பாதிக்கப்பட்டு அமையப் பெற்றால் பெண்ணின் கர்ப்பையில் ரத்தம் கெட்டு போய் விடும். சந்திரனும் நீசம் அடைந்து பலம் குன்றி காணப்பட்டால் அந்த கெட்டுப் போன ரத்தமானது. கர்பப் பையில் தங்கி புற்று நோயினை ஏற்படுத்தும். ஒரு பெண்ணுக்கு 4,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு செவ்வாயும் பலமிழந்து சுபர் பார்வை இன்றி அமையப் பெற்றால் திடீரென கர்பக் கோளாறுகள், மாத விடாய் பிரச்சனைகள் உருவாகி உயிருக்கு பாதிப்பு ஏற்படும். சந்திரன்,செவ்வாயிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
பெண்களுக்கே உரிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பருவமடைவது, தாய்மையடைவது. ஒரு பெண் பூப்பெய்வதை தான் அவள் பருவமடைந்து விட்டதாக கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடையும் பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் இரத்த போக்கு இருக்கும். அந்த பெண்ணின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்மை அடையும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. பூப்பெய்வதன் மூலம்தான் அவள் திருமண வாழ்க்கைக்கே தயராகிறாள். அவளின் உடல் நிலையிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மாதவிடாய் ஒழுங்காக வரும் பெண்களுக்கு கர்ப்பப்பையும் பலமாக இருக்கும். ஜோதிட ரீதியாக மாதவிடாய் ஒழுங்காக அமைவதற்கு பெண்கள் மிக முக்கிய கிரகமான செவ்வாய் காரகனாகிறார். செவ்வாய் ரத்த காரகன் என்பதால் ரத்த ஓட்டத்திற்கு செவ்வாய் காரகத்துவம் வகிக்கிறார்.
பெண்களுக்கே உரிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பருவமடைவது, தாய்மையடைவது. ஒரு பெண் பூப்பெய்வதை தான் அவள் பருவமடைந்து விட்டதாக கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடையும் பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் இரத்த போக்கு இருக்கும். அந்த பெண்ணின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்மை அடையும் போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. பூப்பெய்வதன் மூலம்தான் அவள் திருமண வாழ்க்கைக்கே தயராகிறாள். அவளின் உடல் நிலையிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மாதவிடாய் ஒழுங்காக வரும் பெண்களுக்கு கர்ப்பப்பையும் பலமாக இருக்கும். ஜோதிட ரீதியாக மாதவிடாய் ஒழுங்காக அமைவதற்கு பெண்கள் மிக முக்கிய கிரகமான செவ்வாய் காரகனாகிறார். செவ்வாய் ரத்த காரகன் என்பதால் ரத்த ஓட்டத்திற்கு செவ்வாய் காரகத்துவம் வகிக்கிறார்.
ஒரு பெண்ணின் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பகுதிகளுக்கு நவகிரகங்களில் சந்திரன் காரகனாகிறார். அதுமட்டுமின்றி பெண்ணின் உணர்ச்சிகளுக்கும், மனநிலைக்கும் சந்திரன் காரகனாகிறார். அதனால் செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்கள் பலமாக இருந்தால் மாதா மாதம் ஏற்படக்கூடிய மாதவிடாயானது ஒழுங்காக உண்டாகி ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் கோட்சார ரீதியாக ஜனன கால லக்னத்தையோ, சந்திரனையோ பலமாக பார்வை செய்கின்றபோது பூப்படைவது நிகழ்கிறது. அது போல ஜென்ம லக்னத்திற்கு கோட்சார ரீதியாக சந்திரன் 1,2,4,5,7,8,9,12 ஆகிய பாவங்களில் அமைந்து அதனை செவ்வாய் பார்வை செய்யும் போது பூப்படைவது நிகழ்கிறது.
சந்திரன் சரியாக ஒரு ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அது போலத்தான் நல்ல ஆரோக்கியம் கொண்ட பெண்களுக்கு 27 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு உண்டாகும். அது போல சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். எனவே பெண்ணின் மாதவிலக்கும் இரண்டே கால் நாட்கள் உண்டாகும். சிலருக்கு 3,4, நாட்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதற்கு செவ்வாயின் நிலை காரணமாகிறது.
அதுவே சந்திரன், செவ்வாய் நீசம் பெற்றாலும் சனி, ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றாலும் சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டு உடல் எடை கூடவோ, குறையவோ செய்யும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு கூட தடைகள் ஏற்படும்.
சந்திரன், செவ்வாய் பலவீனமாக அமையப் பெற்று அதன் தசாபுக்தி நடைபெற்றால் மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். சந்திரன் மனோகாரகன் என்பதால் பெண்களுக்கு இக்காலங்களில் மனக்குழப்பங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும் மாத விடாய் கோளாறுகள் உள் பெண்களுக்கும் அமாவசை, பௌர்ணமி காலங்களில் தேவையற்ற மனக்குழப்பங்களும், அதிகப்படியான உடல்நிலை பாதிப்பும் உண்டாகும்.
Comments
Post a Comment