குரு பெயர்ச்சி பலன் - 2014-2015 மகரம்:

              மகர ராசி அன்பர்களே! பொன்னவன் என போற்றப் படக் கூடிய குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7இல் 13.06.2014 முதல் 05.07.2015 வரை உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக்கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும். 21.06.2014 முதல் கேது பகவான் 3இல் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மா-றுதலாக விருப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.

தேக ஆரோக்கியம்

     உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

     பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபிட்சமான நிலையிருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

     பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சனைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு

     தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகுவதுடன் லாபங்களும் தாராளமாக அமையும். வெளியூர் வெளி நாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

     பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர் பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும் புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

அரசியல்வாதிகளுக்கு

     பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும் வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

     பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.

பெண்களுக்கு

     உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களையும் வாங்குவீர்கள்.

படிப்பு

     கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும்.

ஸ்பெகுலேஷன்

     லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.

குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை

     குரு பகவான் ஜென்ம ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7இல் உச்சம் பெற்று தன் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெற முடியும். 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 3இல் சஞ்சரிக்க விருப்பது அனுகூலப் பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.

குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை

    குரு பகவான் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எல்லா வித தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதால் அமையும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணம் மேற்கொள்வீர்கள். தடைபட்டு கொண்டிருந்த மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை

     குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் பல வித சாதகப் பலனை பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் தடையின்றி கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும்.

குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சதரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை

     குரு பகவான் இக்காலங்களில் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். அதிசாரமாக சஞ்சரிப்பது அஷ்டம ஸ்தானம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் முழு முயற்சியுடன் செயல்பட முடியாமல் போகும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நிறைய முன்னேற்றங்கள் உண்டாகும்.

குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை

     சம சப்தம ஸ்தானமான 7இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ர கதியில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதை எதிர்கொண்டு முன்னேற்றமடைவீர்கள். பண வரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். போட்டிகள் குறையும். புதிய வழிமுறைகளை கண்டு பிடித்து அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் உடன் பழகுபவர்களிடம் கவனமுடனிருக்கவும்.

குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.12.2015 முதல் 05.07.2015 வரை

     குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 7இல் சஞ்சாரம் செய்கிறார். இதனால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. மணமாதவர்களுக்கு மணமாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். சனி லாபஸ்தானத்திலும், கேது 3&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்-. பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் விருப்பம் நிறைவேறும்.

உத்திராடம் 2,3,4 &ம் பாதங்கள்

     நல்ல மன வலிமையும் வைராக்கியமும், செய் நன்றி மறவா குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் அனைத்தும் குறையும்.

திருவோணம்

     உதவும் மனபக்குவமும் யார் மனதையும் புண்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 7&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை தடையின்றி பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.

அவிட்டம் 1,2, ம் பாதங்கள்

     அடுத்தவர் உதவியை எதிர் பாராமல் சொந்த முயற்சியால் முன்னேறும் உங்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். பலருக்கு உதவி செய்ய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்புகள் பெருகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண்  8,5,6,17,14,15
கிழமை சனி, புதன்
திசை  மேற்கு
நிறம்  நீலம், பச்சை
கல்  நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்



     மகர ராசியில் பிறந்துள்ள உங்களக்கு 16.12.2014 வரை சனி பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது.

Comments

Popular posts from this blog

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:

தீர்க்க சுமங்கலி:

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்: