இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மகரம்

உத்திராடம் 2,3,4 ,திருவோணம், 
அவிட்டம் 1,2ம் பாதங்கள்

                         அதிகமான தன்னம்பிக்கையும் எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் கொண்ட மகர ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 9லும், கேது பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். 05.07.2015 வரை குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டிலும் 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்க விருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால்  குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். பெரிய மனிதர்களின் நட்புகளால் பல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பதவி உயர்வுகளையும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

உடல் நிலை
உடல் நிலை மிக சிறப்பாக அமையும். இது வரை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சைகளும், அதனால் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்திலுள்ள மனைவி,பிள்ளைகள் மற்றும் பெரியவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் குழந்தை
குடும்பத்தில் எடுத்து திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு நினைத்தவரையே கை பிடிக்க கூடிய யோகமும் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். இதுவரை பகைமை பாராட்டியவர்களும் ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். சேமிப்பும் பெருகும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உங்களுக்கு இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், நெருக்கடிகள் யாவும் குறைந்து எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களையும். கூட்டாளிகளையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
இது வரை எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உங்கள் பணியில் மற்றவரின் தலையீடு இருக்காது. புதிய வேலை தேடுபவர்களுக்கும், வெளியிடங்களில் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள், பணி நிரந்தரம் கிடைக்கும்.

பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன்னும், பொருளும் சேரும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும், சொந்த வீடு மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு
மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயரும். மாண்புமிகு உயர் பதவிகள் தேடி வரும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக அமைந்து விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைக்கும். லாபம் பெருகும் பட்ட பாட்டிற்கானப் பலனை தடையின்றிப் பெற முடியும். கால் நடைகளாலும் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும்.

கலைஞர்களுக்கு
எதிர்பார்த்து காத்திருக்கும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். படபிடிப்பிற்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அசையும் அசையா சொத்துக்கள் சேரும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நினைக்கும் காரியங்களை நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் உதவிகள் தேடி வரும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டும் மன நிம்மதியை கொடுக்கும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவானும் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்த பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில் வியபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நன்மையானப் பலன்களையே பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் உண்டாகும். பண வரவுகள் திருப்தி கரமாக இருக்கும். புதிய நவீன கருவிகளை வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். போட்டி பொறாமைகள் விலகி நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் பதவி உயர்வுகள் யாவும் கிட்டும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களும் திறமையுடன் செயல்பட்டு திறமைக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும்.  கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மையானப் பலன்களைப் பெற முடியும் என்றாலும் 05.07.2015 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிப்பு குறையாமலிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருந்தாலும் உடன் பணி புரிபவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும்.

குரு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. சில நேரங்களில் முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் லாபங்களும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்க முனைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமானப் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிட்டும்.

திருவோணம்
தனக்கென தனிக்கொள்கையும் கட்டுப்பாடும் கொண்ட உங்களுக்கு பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல்  சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மணமாகாதவர்களுக்கு மணமாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

அவிட்டம் 1.2ம் பாதங்கள்
தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டும் குணம் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபார ரீதியாக அனுகூலமான பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். ஆடம்பர செலவுகளை சற்று குறைக்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  8,5,6,17,14,15
கிழமை  சனி, புதன்
திசை மேற்கு
நிறம்  நீலம், பச்சை
கல் நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு 16.12.2014 வரை சனி பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்லது. 5.7.2015 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய்தீப மேற்றி வழிபடவும்.

Comments

Popular posts from this blog

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:

தீர்க்க சுமங்கலி:

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்: